ஆறு பரப்பு காணிவித்து...
ஐந்து பரப்பு காணி வாங்கி...
அப்பப்பா வந்து ...
அடிக்கல் வைத்து...
அத்திவாரம் போட்டு ...
கருத்தகொளும்பான் மரத்திடியில் ...
கலரிந்து, அடுக்கி, தண்ணிவிட்டு ...
சுத்திச் சுவர் எழுப்பி - அதில
கதவு வச்சு ...
யன்னல் வச்சு - அதுக்கு
மழை பட கூடாது என்று - சன்செட்
முற்றத்தில போட்டிக்கோ ...
வெளிச்சுவர் இருக்க ...
உட்சுவர் பூசி...
ஊருக்கெல்லாம் சொல்லி - குடிபூரல் ....
வைரவர் கோயிலிருந்து - படம்
வழி நடையா கொண்டுவந்து ...
பெரிய மாமா தேங்காய் உடைக்க ...
பெரிய அறையில சாமிப்படம்...
தும்பிக்கை சரிபார்த்து - பிள்ளையார் படம் ...
துணைவி வள்ளி, மனைவி தெய்வானை, முருகன் ...
மூன்று பெரும் நிக்கிற ஒரு படம்...
முக்கியமா அவையால் இருக்கவேணும்!
இலச்சுமி படத்துக்கு ...
இலச்ச கணக்குல கண்டிஷன் - வீட்டில
தங்கம் குவியவேண்டும் என்று - காசெல்லாம்
தட்டில விழவேண்டும் - சிதறக்கூடாது ...
அத்திவாரம் போட்டு ...
ஆறு மாதத்தில் அடி வைத்தாலும் ...
ஆடு மாடு கட்ட என்று ...
அருகில ஒரு கொட்டில் ...
எல்லாரும் இப்படித்தான் வீடுகட்டுறது...
எல்லாம் கட்டி என்ன செய்தது - கடைசீல...
எவனோ திறத்த ஓடிவந்ததுதான்...
"எப்படியும் ஒருநாள் திரும்பி போறதுதானே"
எத்தனை காலம் போட்டு இப்படி சொல்லிச் சொல்லி...
இருபது வருஷம் தாண்டி...
இப்ப விடுகினமாம் ...
..................................
இன்னமும் எழுதவேணும் ...
6 comments:
நல்லதொரு ஆக்கம்... தொடரட்டும்...
Superup...! nice anna
Super... Nimalan
நன்றி ...
நாங்கள் கரைதேடும் அலைகள்....!! தொடரட்டும் வாழ்த்துகள்...!!!
உண்மைதான்... நன்றிகள் ...
Post a Comment