Monday, October 27, 2008

Changes

அன்று!
பசுமை பொங்கும் எம் ஊர் வயல்வெளி,
பச்சை நிற என்னவள் ஆடைகள்,
வயலுக்கு நிறம் தந்தது அவள் நினைவுகளா? - அல்லது
வயல்கள் அவளை நினைவு படுத்தவா?
மாயை

இன்று!
ஆண்டுகள் ஆகின்றன
அவளை மறந்து - அன்னியனால்
அன்னை மண்ணில்
அறுவடையும் இல்லையாம்.
நிதர்சனம்

Tools

ஆணிகளே மன்னியுங்கள்!
அறைந்தது வலித்ததுக்கு
அறைந்த பின்
அழகு தாங்கி சுவரில் நீங்கள்
அறை மூலையில்
அமைதியாய் நான். - சுத்தியல்